நாட்டில் பாடசாலை மாணவர்கள் மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த் அத்துகோறள மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
நாட்டில் உள்ள 360 பாடசாலைகளில் 370 ஆசிரியர்களை ஈடுபடுத்திமேற்கொண்ட ஆய்விலேயே இத தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
மாணவர்கள் பாடசாலை வர தயங்குவதற்கு காரணம் போக்குவரத்து பிரச்சனை, உணவு இல்லாமை மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு முடியாதுள்ளமையே அவர்கள் பாடசாலை வர தயங்குவதன் காரணம் என ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.