*கொழும்பு வலயத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படும் எனவும் கிராமப்புற பாடசாலைகள் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.