இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களுக்காக பேரூந்து வடிவமைப்பு!!

school bus

7 வருடங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு அரச நிறுவனமான லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 80 பேருந்துகள்
அனுமதியின்றிய காரணத்தால் ஏழு வருடங்களாக செயற்படுத்தப்படவில்லை எனவும், கூடிய விரைவில் அவை செயற்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொள்வனவு செய்வதற்கான தொழில்நுட்பக் குழுவின் அனுமதி கிடைக்காமையால் குறித்த நிறுவனத்தின் பனாகொட தொழிற்சாலை வளாகத்தில் அவை இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இந்தப் பேருந்துகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பனாகொடவில் அமைந்துள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இலங்கை தொழிற்சாலையை இன்று பார்வையிட்டதன் பின்னர் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர், இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button