இந்தியாசெய்திகள்

சரயு தேசிய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம் திறந்து வைக்கப்பட்டது!!

Sarayu National Canal

9 800 கோடி இந்திய ரூபா செலவிலான உத்தர பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூரில் சரயு தேசிய கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று(11) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

14 இலட்சம் ஹெக்டேயர் நிலங்கள் இந்த திட்டம்மூலம் நீர்ப்பாசன வசதி பெற முடியும் என்பதுடன் 6 200 கிராமங்களை சேர்ந்த 29 இலட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

1978ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 40 ஆண்டுகளாக இந்த திட்டம் முழுமை பெறாமல் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அங்குச் செயற்படுத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button