இலங்கைசெய்திகள்

மழை ஓய்ந்துள்ள போதிலும் வெள்ளத்தில் மூழ்கும் பாடசாலையும், மக்கள் குடியிருப்புக்களும் – வீதியை உடைத்து வெள்ள நீர் வெளியேற்றம்!!

Saraswati Vidyalaya

மட்டக்களப்பு மாட்டத்தில் பெய்து வந்த வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை சற்று ஓந்துள்ள போதிலும் தற்போதும் பாடசாலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட பல இடங்களில் மழைவெள்ளம் தேங்கி நிற்பதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை நேரில் அவதானித்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் தனது சொந்த செலவில் வியாழக்கிழமை(13) கொங்றீட் வீதியை உடைத்து தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் களுவாஞ்சிகுடி கிராமத்தில் அமைந்துள்ள சரஸ்வதி வித்தியாலயம் தற்போதும்கூட வெள்ள நீரில் அகப்பட்டுள்ளதனால் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் கல்வி கற்கும் மாணவர்களும் மிகுந்த அசௌகரியங்களுக்குட்பட்டு வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகள் தொற்று நோய்க்குட்படும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிராமத்திலுள்ள மக்கள் குடியிருப்புக்களில் தேங்கி நிற்கும் மழைவெள்ளம் வழிந்தோட வழியின்மையால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

வெள்ளநீர் வழிந்தோட முடியாத வகையில் கொங்றீட் வீதிகள் இடப்பட்டுள்ளதனால் வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் இதன் காரணமாக கொங்றீட் வீதியை உடைத்து வெள்ள நீரை வெளியேற்றுவதாகவும் இதன்போது மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button