இலங்கைசெய்திகள்

பாராளுமன்றத்தில் கேள்விகளால் வறுத்தெடுத்தார் சஜித்!!

Sajith

சில வருடங்களுக்கு முன்பே நெருக்கடி குறித்து  எச்சரிக்கை செய்த போது அரசாங்கம் கேலியாக சிரித்தது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இன்றைய விசேட உரையில்  கூறியுள்ளார்.  

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  தற்போதைய அரசாங்கம் திட்டமிட்டு நாட்டை அழித்துள்ளதாகத் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். சில்லறை தீர்வுகளை மட்டும் கொடுக்காதீர்கள்.  உண்மை பேசுங்கள். பிரதமர் எழுந்து நின்று அறிக்கை செய்தார். எரிவாயு வரிசை எப்போது மறையும் என்பதை எங்களிடம் தெளிவாகக் கூறுங்கள். டீசல் பெட்ரோல் எப்போது கிடைக்கும்? இந்த நாட்டில் தாய்மார்களுக்கு பால் மாவு எப்போது கிடைக்கும்? மின் உற்பத்திக்கு என்ன தீர்வு? என்பதை தயவுசெய்து எழுந்து நின்று சொல்லுங்கள்” என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார். 

மேலும் “நிதி மேலாண்மை குறித்து பிரதமர் பேசுகிறார். இதற்கு சர்வதேச சமூகத்திடம் இருந்து நல்ல பதில் கிடைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். சர்வதேச சமூகத்துடனான இந்த ஒப்பந்தம் ஏன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்யப்படவில்லை என்று பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.

கோடீஸ்வரர்களுக்கு 600 மில்லியன் வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்க வருமானம் 2% – 4% வரை ஏன் குறைக்கப்பட்டது. ஏன் அந்தக் குற்றத்தைச் செய்தார்? அந்தக் குற்றத்தால்தான் இன்று எரிபொருள் வரிசை, எண்ணெய் வரிசை, பால் பவுடர் வரிசை, மண்ணெண்ணெய் வரிசை, டீசல் வரிசை, அரிசி வரிசை என எல்லா இடங்களிலும் மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.

இன்று மருந்து இல்லை. இன்று அரசாங்கம் மருந்துகளை கொண்டு வர உலகம் முழுவதும் கெஞ்சுகிறது.

ஆனால் இன்று மருத்துவமனைகளுக்கு நாங்கள் உபகரணங்களை வழங்குகிறோம். இந்த மக்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை நாங்கள் அதிகாரம் இல்லாமல் செய்கிறோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button