இலங்கைசெய்திகள்

பாடத்திட்டத்தை பூர்த்திசெய்யாதது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – சஜித் குற்றச்சாட்டு!!

sajith

உயர்தர பரீட்சையினை பாடத்திட்டத்தை உரிய வகையில் பூர்த்தி செய்யாது நடத்த முற்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹட்டனில் நேற்று (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்யாது எவ்வாறு பரீட்சையினை நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் காரணமாக இணைய வழி கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் அதனைப் பெற்றுக்கொள்வதில் மாணவர்களுக்கு பாரிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன.

சிலருக்கு தொழில்நுட்ப வசதிகள் கிடைத்திருக்கவில்லை.

ஆனால் முழுமையான பாடத்திட்டத்தையும் உள்ளடக்கியவாறு பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்களை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button