ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக டொலருக்கு நிகரான ரஷ்யாவின் ரூபிள் பெறுமதி 30 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறே, அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளுக்கு மத்தியில் யூரோ பெறுமதி ஒரு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் யுக்ரைனின் நிதி மற்றும் சமூக செலவுகள், இந்த வார இறுதியில் யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து உயர்ந்துள்ளன.
ரஷ்யர்கள் தங்கள் வங்கி அட்டைகள் செயலிழந்துவிடும் அல்லது பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற அச்சத்தில் பணத்தை எடுக்க வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் பிரதான அரச வங்கியான ஸ்பெர்பேங்கின் ஐரோப்பிய செயல்பாடுகள் ஏற்கனவே செயலற்ற நிலையில் உள்ளன, மேலும் ரஷ்யாவின் மத்திய வங்கி, அமெரிக்க டொலர் 630 பில்லியன் வெளிநாட்டு இருப்பு பாவனையை தடுக்க புதிய தடையை விதித்துள்ளது.
ரஷ்ய ரூபிள் பெறுமதியை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.