8-வது நாளைத் தொட்டுள்ள ரஷ்யா – உக்ரைன் போரினால் , மனக்குழப்பமடைந்துள்ள ரஷ்யப் படைகள் உக்ரைனில் கூட்டமாக சரணடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யப் படைகள் மனக்குழப்பத்திலும் சோர்வடைந்தும் காணப்படுவதாகவும் பல ரஷ்யப் படையினர்கள் தாங்கள் உக்ரைனில் போருக்கு அனுப்பப்பட்டுள்ளோமா என்பதும் தெரியவில்லை எனக்கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உணவுக்காக சில ரஷ்ய இராணுவத்தினர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல ரஷ்யப் படையினர்கள் உக்ரைனில் தங்களின் பணி என்ன என்பது தொடர்பில் மேலிடத்து தகவலுக்காக காத்திருப்பதாகவும், ஆனால் ஒருபக்கம் உணவு கேட்டு முறையிடுவதுடன், தாக்குதலுக்கு மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போர் களத்தில் இருந்து தப்பிக்க ரஷ்யப் படையினரே சொந்த நாட்டு வீரர்களையே உக்ரைன் பாதுகாப்புத்துறையினருக்கு காட்டிக்கொடுக்கும் வேலைகளும் முன்னெடுக்கப்படு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.