உக்ரைன்- ரஷ்ய ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமாகி இன்றுடன் நூறு நாட்கள் கடந்துள்ளது. யுக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள முடிவு செய்ததை அடுத்து ரஷ்யா கடந்த பெப்ரவரி 24 ம் திகதி யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஆரம்பமானது.
இந்த யுத்தத்தின் மூலம் இதுவரை 68 இலட்சம் பேர் யுக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் யுக்ரைன் மக்கள் அதிகமாக தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
யுக்ரேனின் முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் வசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.