உலகம்செய்திகள்

போரை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்குத் தயார் – ரஷ்யா!!

Russia

யுக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதல் 2ஆவது நாளாக தொடர்கிறது.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதேபோல் யுக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்யா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று யுக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், யுக்ரைன் இராணுவம் போரை நிறுத்தினால் பேச்சு வார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அடக்குமுறையில் இருந்து யுக்ரைனை மீட்க வேண்டும் என்பதே தங்களின் நோக்கம் என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரேவ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button