உலகம்செய்திகள்

யுக்ரைனியர்களை வெளியேற்றியது ரஷ்யா!!

Russia

நேட்டோ அமைப்பில் யுக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை யுக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.

இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் யுக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.

இதற்கிடையே, கிழக்கு யுக்ரைனில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்தது.

அங்கு படைகளை களமிறக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டதால் ரஷ்யா தனது படைகளை அப்பகுதியில் நிலைநிறுத்தியது.

இந்நிலையில், ரஷ்யா படையெடுப்பின் அச்சுறுத்தலால் யுக்ரைனில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

மேலும், ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என யுக்ரைன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button