பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் சுவாசப் பிரச்சினை காரணமாக ரோமில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்த போதும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
86 வயதான பாப்பரசர் அவர்கள் சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாப்பரசர் அவர்கள் குணமடைய வேண்டும் என உலக தலைவர்கள் பிரார்த்தனைகளை முன்னெடுத்துள்ளனர்.