செய்திகள்தொழில்நுட்பம்

மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க நுண்ணறிவு கொண்ட ரோபோ உருவாக்கம்!!

Robot

 AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

அமெக்கா என்ற அந்த ரோபோவின் முகபாவனைகளைக் கட்டுப்படுத்த அதன் தலையில், சமிக்ஞைகளை இயக்கங்களாக மாற்றுவதற்கான சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

அதன்மூலம், அமெக்காவின் புன்னகை, கண் சிமிட்டல் போன்றவை மனிதர்களைப் போன்றே இருப்பதாகவும், அதை உருவாக்கிய நிறுவனத்தின் தலைவர் தெரித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து அமெக்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு, ரோபோக்கள் மிகவும் சக்திவாய்ந்தவை ஆகிவிட்டால், மனிதர்கள் அறியாமலேயே அவர்களை கட்டுப்படுத்தவும், கையாளவும் ரோபோக்களால் முடியும் என்றும் .

அதேநேரம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டால், மனிதர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button