கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் கடைகளில் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனிநபர் வியாபாரிக்கு குறைந்தபட்சம் ரூ.100,000 அபராதமும் அதிகபட்சமாக ரூ.500,000 அபராதமும் விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தனியார் நிறுவனம் ஒன்று கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்தால் 500,000 முதல் 5 மில்லியன் வரை அபராதம் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.