பல நகரங்களில் அரிசி விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மாறுபட்ட விலைகளிலேயே அரிசி விற்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி 150 ரூபாய்க்கும் 160 ரூபாய்க்கும் இடையிலும் சிவப்பு பச்சை அரிசி 160 ரூபாய் முதல் 170க்கு இடையிலும் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாய் முதல் 180 ரூபாய்க்கு இடையிலும் விற்கப்படுகின்றது.
அரிசி விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாங்கள் பல்வேறான துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அரிசி மட்டுமன்றி ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் இவ்வாறு அதிகரித்துள்ளன என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.