முன்னாள் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த ராம் ஆறு வருட சிறைத்தண்டனை முடித்து நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
2009 இல் போர் மௌனித்த பிற்பாடு கைது செய்யப்பட்ட அவர் விடுவிக்கப்பட்டு இலங்கை புலனாய்வு அமைப்பினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்.
பின்னர் 2015 இல் தென்மராட்சியில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு வருட சிறைத்தண்டனை பெற்றார்.
அவரது தண்டனைக் காலம் முடிவுற்ற நிலையில் நேற்று மட்டக்களப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.