இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

Release

 தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றதால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2009 இல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு வவுனியா நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ். கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர், 

திருவருள் (வயது 45), ம.சுலக்சன் (வயது 34), க. தர்சன் (வயது 33) ஆகிய மூவரும் அரசாங்கத்திற்கு எதிராக திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டனர் எனவும் 

ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என்றும் இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சுயாதீன சாட்சிகள் குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டு விடுவிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button