இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

தீபாவளி தினத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

 தீபாவளி தினமான இன்றும் (04.11) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 1722 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டோர், ஐசிசியில் தமிழர் இனப்படுகொலையை விசாரித்து வரும் நிலையில் 13ஐக் கோரக் கூடாது.

வாக்கெடுப்பை கோருங்கள் என பொறிக்கப்பட்ட பதாதையையும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன், தீபாவளியும் எமது பிள்ளைகள் கிடைக்கும் வரை எமக்கு துக்க தினமே என இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button