மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆகஸ்ட் 30- அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாள். அதனை முன்னிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனப்படுகொலை யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட146679 தமிழ் மக்களுக்கும் என்ன நடந்து என அரசு தமிழ் மக்களிற்குப் பதில் சொல்லி நீதி வழங்காமல் எந்தப் பேச்சுக்களிற்கும் முடிவின்றி இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது.
2000 நாட்களிற்கும் மேலாக வலிந்து காணாமலாக்கப்பட்ட தம் உறவுகளிற்காக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – பிரபா அன்பு