இலங்கையில் உள்ள சகல அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் கோதுமை மா உணவுகளையும் இனிப்பு பானங்களையும் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சுகளை இணைத்து குறித்த நடவடிக்கைகளைச் செயற்படுத்தவுள்ளதாகவும் இதற்காக குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா உணவுகளைத் தவிர்த்து அரிசி மா உணவுகளை உள்ளெடுப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.