எதிர்வரும் வாரத்தின் முதல் சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார். இந்நிலையில் நீதியமைச்சர் அவரது விடுதலை தொடர்பில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவதற்கு முன்னர், நீதித்துறை தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து வாக்குமூலமொன்றை சமர்ப்பிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து, நல்ல செயல்களைச் செய்து, சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடியவர் என்பதன் அடிப்படையில் ஜனாதிபதியின் மன்னிப்பு நியாயமானது என அரசாங்கம் நம்புவதாக நீதி அமைச்சர் திரு.விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்குள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதோடு, எதிர்வரும் வாரத்தில் அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட உள்ளார்.