இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
சலுகை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க ரணில் தீர்மானம்!!
Ranil wickremesinghe

எரிவாயு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் என்பவற்றை சீராக வழங்குவதற்கான சலுகை வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முன்வைக்கப்படவுள்ள சலுகைப் பாதீட்டில் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் முறையை வலுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் இவை பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.