இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கைக்கு உதவ வேண்டாம் – ஜப்பானிடம் கோரிக்கை விடுத்த ரணில் விக்கிரமசிங்கே!!

Ranil wickremesinghe

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே குறித்த தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

விக்கிலீக்ஸ் பகிர்ந்த ஆவணத்தின்படி, 2007 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியிருந்தார்.

இலங்கை மக்கள், தங்கள் தலைவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்படக்கூடாது என்று ஜப்பான் பதிலளித்ததாக குறித்த ஆவணம் மேலும் வெளிப்படுத்தியுள்ளது.  

இந்த தகவலை அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் அமெரிக்காவிற்கு தெரியப்படுத்தியிருந்தார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்த தயார் என அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அக்காசியிடம் உறுதியளித்திருந்தார் என விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button