“எங்கள் ஆட்சியில் நாம் நாட்டு பொருளாதாரத்தை மட்டுமல்ல வீட்டு பொருளாதாரத்தையும் பாதுகாத்தோம். மக்களுக்கு மூவேளைகளும் சாப்பிடக்கூடிய நிலைமைக் காணப்பட்டது. சமையல் அறையின் பாதுகாப்புக்கூட உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.”
- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி. இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2015 முதல் 2019 வரை நாட்டு பொருளாதாரம் எப்படி இருந்தது என ஆளுங்கட்சியின் எழுப்பிய கேள்விக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே ரணில் இவ்வாறு குறிப்பிட்டார்.
“அக்காலப்பகுதியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது. மக்களின் வருமானம் குறையவில்லை. தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இன்று அந்நிலைமை இல்லை. மக்களும் அந்த காலமே போதும் என தற்போது எண்ணுகின்றனர்” என்றும் ரணில் குறிப்பிட்டார்.
அத்துடன் அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்பிலும் சபையில் ரணில் கேள்வி எழுப்பினார்.
செய்தியாளர் சுடர்