இலங்கைசெய்திகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பால்நிலைக்கேற்ப பதவிகளிளுக்கான கடமைகள் பகிந்தளிக்க வேண்டும்.- தெ.கி.ப.கழக உபவேந்தர் அபூபக்கர் றமீஸ்!!

Ramees abubakkar

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோட்பாட்டின் அடிப்படையில் பால்நிலைக்கேற்ப பதவிகளின் கடமைகள் பகிந்தளிக்க வேண்டும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான ‘பால்நிலை, சமநிலை, சமத்துவம், ஒப்புரவு மற்றும் பாலியல் வன்முறை பற்றிய சட்டவியல் விழிப்புணர்வு தொடர்ன கருத்தரங்கு, பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி நிலையத்தினதும் பால்நிலை, சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினதும் ஏற்பாட்டில் (26) பல்கலைக்கழக பணியாளர்கள் அபிவிருத்தி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் பணியாளர்கள் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கூறுகையில், அரச அலுவலகமோ அல்லது தனியார் துறைகளிளலோ ஆண்களுக்கு வழங்கப்படும் கடமைகள் போன்று பெண்களுக்கு வழங்க முடியாது. பெண்களுடைய தகுதிற்கேற்ப அவர்களால் மேற்கொள்ளக் கூடிய வகையில் வேலைத்தரங்களை இனங்கண்டு கடமைகளை வழங்குவது பொருத்தமானதாகும்.

கடந்த 2017, 2018 காலப்பகுதியில் பல்கலைக்ககழக மானியங்கள் ஆணைக்குழு முக்கியத்துவமான பேராசியர்கள் மூலமாக பல்கலைக் கழகங்களிலுள்ள மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய தரப்பபினர்ளுக்கிடையிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பெண்கள் தொடர்பான ஒரு வரைபினை தயாரித்ததுள்ளது. அதில், ஒரு ஆணோ, பெண்ணோ உடல், உள ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ துன்புறுத்தப்பட்டால் அல்லது உரிமைகள் மறுக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கைள், வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாகவும் மற்றும் பல்கலைக்கழக பால்நிலை, சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட உதவி நூலகருமான கலாநிதி எம்.எம். மஸ்றூபா, உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி நிலையத்தின் நிகழ்ச்சி முகாமையாளர் சிரேஸ்ட உதவிப் பதிவாளருமான எம்.ரி.ஏ.அஸ்ஹர், முகாமைத்துவ உதவியாளர் ஓ.எல்.எம்.முனவ்வர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், உயர்நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.சி.எம். நவாஸ், பல்கலைக்கழக சட்டம் மற்றும் ஆவணப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி ஆகியோர்கள் வளவாளராக கலந்து கொண்டதுடன், இதில் 75 அதிகமான கல்விசார் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button