Breaking Newsஇலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களின் முக்கிய திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது!!

Rajapaksa family

10 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அதிபர் கோட்டாபயவை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பானது அன்றைய ஆளும் தரப்பினரின் அனுதாபத்தைப் பெறுவதற்கான “உள் வேலை” என இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குறித்த குண்டுத் தாக்குதலானது தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

“முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர், அப்போதைய பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச மீது 2006 டிசம்பர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலானது, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது.

எந்தவொரு பயங்கரவாதியும் திட்டமிட்ட இலக்கில் இருந்து 25 மீற்றர் தொலைவில் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை, இது அப்போதைய ஆளுங்கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட உள் வேலைத்திட்டமாகும்.

2006 ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த குறித்த குண்டுவெடிப்பில் இருந்து கோட்டாபய காயமின்றி உயிர் தப்பினார்.

தாக்குதல் நடந்த உடனேயே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துமாறு அமைதி தூதுவராக இருந்த நோர்வேயை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

போர்நிறுத்தத்தில் இருந்து பின்வாங்கி இறுதியில் மே 2009 இறுதி யுத்தம் நடைபெற்றிருந்தது.” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஏப்ரல் 2006 இல் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 பின்னர் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்.

ராஜபக்ச குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் அவர்களை விட்டு பிரிந்து சென்றவர். 2010 அதிபர் தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

ஊழல் குற்றச்சாட்டில் இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்டார். 

Related Articles

Leave a Reply

Back to top button