செய்திகள்புலச்செய்திகள்முக்கிய செய்திகள்
அமெரிக்க பணக்காரர்களில் ஒருவரான தமிழரான ராஜ் ராஜரட்ணம் யாழுக்கு வருகை!!
Raj Rajaratnam

அமெரிக்காவின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான இலங்கைத்தமிழரான ராஜ் ராஜரட்ணம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் யாழ். போதனாவைத்தியசாலைக்குச் சென்று அதன் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். மேலும் இவர் அரசியல்வாதிகள் சிலரையும் சந்திக்கவுள்ளார் எனத்தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பங்குச்சந்தை மோசடி தொடர்பில் அமெரிக்க புலனாய்வினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடுமையான போராட்டத்தின் பின்னர் தன்னை நிரபராதி என நிரூபித்து சிறை மீண்டுள்ளார். சிறையில் இருந்த காலத்தில் இவர் எழுதிய ‘uneven justice’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூல் விளைந்த நீதி என்னும் பெயலிர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விரைவில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது எனக்கூறப்படுகின்றது.