இலங்கைசெய்திகள்

சாணக்கியன் ஒரு சர்வதேச கைக்கூலி  – சாடுகிறார் அலிசப்ரி!! 

R. Chanakkiyan

 பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் கைக்கூலியாகவே

செயற்படுகிறார் என்றும் அவரின் குற்றச்சாட்டுக்களுக்கும் பொய்களுக்கும் நான் அடிபணியமாட்டேன் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்த போதே

இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“புலம்பெயர் பிரிவினைவாதிகளின் கைக்கூலி ஒருவர் இந்த பாராளுமன்றத்தில் உள்ளார். அவர்

பெயர் சாணக்கியன் இராசமாணிக்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாடுகளை இவர்

விரும்பமில்லை. பிரச்சினைகளை நீடித்து அதனூடாக இலாபமடைவதை நோக்கமாக

கொண்டுள்ளார். பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவரேனும் நடவடிக்கை எடுக்கும் போது அதற்கும்

எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நான் செயற்படும் போது புலம்பெயர் பிரிவினைவாதிகள்

அவருக்கு அதனை குழப்புமாறு ஆலோசனை வழங்குகின்றன. இவர் அவர்களின் கைக்கூலி

என்பதனால் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி பாராளுமன்றத்தில் கடுமையாக

கருத்துக்களை பொய்களை முன்வைக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நான் வீடு ஒன்றைக் கொடுத்ததாக புதன்கிழமை இந்த

சபையில் குறிப்பிட்டுள்ளார். நான் எவ்வாறு அவருக்கு வீடு வழங்க முடியும்?தொழிலுக்காக நான்

அரசியலுக்கு வரவில்லை. சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் தான் நான் வாழ்கிறேன். நான்

எனது வீட்டை யாருக்கும் வழங்கவில்லை.

பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் இருந்து கொண்டு முறையற்ற விடயங்களை குறிப்பிட

முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின்

கைக்கூலியாகவே செயற்படுகிறார்.

குரைக்கும் நாயை நோக்கி கல்லெறிந்து கொண்டிருந்தால் சிறந்த இலக்கு நோக்கி பயணிக்க

முடியாது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்ட கருத்துக்கள்

அடிப்படையற்றவை.

நாங்கள் எமது பயணத்தை சிறந்த முறையில் வெற்றிக் கொள்கிறோம். நாட்டில்

புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு தேசிய நல்லிணக்கத்தை

உறுதிப்படுத்துவோம். புலம்பெயர் பிரிவினைவாத நோக்கத்துடன் செயற்படும் தரப்பினரின்

அச்சுறுத்தலுக்கும்,சேறுபூசலுக்கும் அடிபணிய மாட்டேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button