உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

பிரித்தானியா மகாராணியின் கிரீடம் யாருக்கு!!

Queen of Great Britain

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் காலமானார்.

தெ டைம்ஸ், டெய்லி மெய்ல், தெ டெய்லி டெலிகிராப், போன்ற செய்தித்தாள்கள் மகாராணியின் மரணம் குறித்து தமது இரங்கலை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய மகாராணியின் மரணம் காரணமாக எமது இதயம் நொருங்கிப்போயுள்ளது என்று அந்த நாட்டின் முன்னணி செய்தித்தாள்கள் கூறியுள்ளன.

மகாராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் முன்னணி செய்தித் தாள்கள் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளன.

மகாராணியின் மூத்த மகனான இளவரசர் சார்ல்ஸ் மன்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மகாராணியாக சார்ல்ஸின் துணைவியான கமிலா மகாராணியாக முடிசூடவுள்ளார்.

இதனையடுத்து ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியாவில் எடுத்துச் செல்லப்பட்ட 2ஆயிரத்து 800 வைர கற்களால் ஆன ராணியின் கொஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலாவுக்கு வழங்கப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button