இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
செப்டெம்பர் 20 – சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள்!!
Procedural tests

எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில காரணங்களால் குறித்த செயன்முறை பரீட்சைகள் 20ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.