இலங்கைசெய்திகள்

மட்டுவில் சாதனைப் பாடசாலைக்கு 200 000 பெறுமதியான தொலைக்காட்சி CCD அமைப்பால் அன்பளிப்பு!!

Prize giving

யா/மட்டுவில் வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 2021, மற்றும் 2022 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அண்மையில். நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலைச் சமூகத்துடன் இணைந்து முதல்வர் திருமதி தர்மினி அம்பிகைபாகன் தலைமையில் இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.

நிகழ்வின் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலையக்கல்விப் பணிப்பாளர் திரு.கிருபாகரன், சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.நடராசா மற்றும் கௌரவ விருந்தினராக மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத் தலைவர் திரு.சு.சுதாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

முதலில் 2020 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் புரீட்சைக்குத் தோற்றிய 11 மாணவர்களில் 01 மாணவன் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்ததுடன் 10 மாணவர்களும் சிறப்பான புள்ளிகளைப் பெற்றிருந்தனர்.
2021 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய 16 மாணவர்களில் 04 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் ஏனைய அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.
என அதிபர் தனது உரையில் குறிப்பிடரடார் .

அதிபர் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் இருவருக்கும் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு மோகனதாஸ் சனசமூக நிலையமும் மோகனதாஸ் ஐரோப்பிய ஒன்றியத்தினரும் இணைந்து உருவாக்கிய மோகனதாஸ் புலமைப் பரிசில் நிதியமானது இவ்வருடத்தில் இருந்து வருடா வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மற்றும் இப்பாடசாலையில் இருந்து தரம் 06 ற்குச் செல்லும் மாணவர்களிற்கு புலமைப் பரிசில் நிதியைக் கொடுக்கும் திட்டத்தினை உருவாக்கியுள்ளது.

இதன் வாயிலாக வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு தலா 8000 ரூபாவும் ஏனைய மாணவர்களுக்கு தலா 4000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன்

வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பிரதேச வைத்திய கலாநிதி திருமதி லியோன் புஸ்பராணி அவர்களால் தலா 1000 ரூபா பணப்பரிசிலும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பிரித்தானியாவைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கும் ccd நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் 55″ LED தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் அந்நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட  அமைப்பாளரும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளருமான லயன் செ.பரணிதரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாகப் பணியாற்றும் பாடசாலைச் சமூகத்திற்கு ஐவினஸ் தமிழும்
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

Related Articles

Leave a Reply

Back to top button