இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மாணவன் மீது அதிபர் கொடூரமான தாக்குதல் – காத்தான்குடியில் சம்பவம்!!

Principal attack

5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

10 வயதான குறித்த சிறுவன், சம்பவ தினமான கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலைக்குச் சென்று இடைவேளை நேரத்தில் பாடசாலைக்கு அருகிலுள்ள கடையொன்றில் உணவுப் பொருட்களை வாங்கியுள்ளார்.

மாணவனைக் கண்ட அதிபர், குறித்த உணவு பொருட்கள் வாங்குவதற்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? என்று வினவி, 3 பிரம்புகளை ஒன்றாக்கி மாணவனைத் தாக்கியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீடு திரும்பிய மாணவனின் மீது தளும்புகளைf; கண்டு பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் சம்பவத்தை விபரித்துள்ளார். இதனையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ள நிலையில் காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மாணவனைத் தாக்க உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதிபர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ஆசிரியையை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button