பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் – நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!!
Principal
யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அநேகமான பாடசாலைகளில் நிரந்தர அதிபர் இன்றி பாடசாலைகள் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன.
யாழ்ப்பணத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டங்கள் செல்லாத சுமார் 44 அதிபர்கள் யாழ்ப்பாணத்தில் இடமாற்றம் இன்றித் தங்கியுள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் தவிர்ந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அநேகமான பாடசாலைகளில் நிரந்தர அதிபர் இன்றி பாடசாலைகள் இயங்கி வருகின்றன.
யாழ்ப்பணத்தில் ஆசிரியர் நியமனத்திலும் அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டங்கள் செல்லாத சுமார் 44 அதிபர்கள் யாழ்ப்பணத்தில் இடமாற்றம் இன்றி தங்கியுள்ளனர்.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிபர்கள் அற்ற பாடசாலைகளுக்கு விரைவாக அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.