இலங்கைசெய்திகள்

சிறுவர்களின் கல்வி உரிமை குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!!

Prime Minister Mahinda Rajapaksa

தொழில்நுட்பம் நன்மை தருவதை போன்றே தீமையை ஏற்படுத்தும் என்பதால் சரியானதை தெரிவுசெய்ய பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

பிள்ளைகளை பெற்றோர் போன்றே ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டடத்தை நேற்று(06) திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக வீட்டில் இருந்த பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதாக பெற்றோர்கள் முறையிடுகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள்கூட எச்சரித்துள்ளனர். தொழில்நுட்பத்தினூடாக நன்மை ஏற்படும் அதேவேளை தீமைகளும் உள்ளன.

எனவே தவறான வழியில் செல்லாது தொழில்நுட்பத்தினூடாக நன்மையை மாத்திரம் பெறுவதற்கு பிள்ளைகள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் தற்போது 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளோம்.

அதேநேரம் பாடசாலைக்கு செல்லாத சிறார்களைக் கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டமொன்றையும் செயல்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button