இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

அரச பாடசாலைகளில் தரம் – 3இல் கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்தறிவு இல்லை!!

Primary

 அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கல்வி கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான அறிவு இல்லை என கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

COVID பெருந்தொற்றினால் பாடசாலைகள் மூடப்பட்டமையே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. 

கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுதுதல், அடிப்படைக் கணக்கு தொடர்பான அறிவு போன்றவற்றின் அடிப்படையில், கல்வி அமைச்சினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தரம் 3-இல் பயிலும் 34% மாணவர்களுக்கு மாத்திரமே எழுத்தறிவும் 7% மாணவர்களுக்கு மாத்திரம் எண்கள் தொடர்பான அறிவும் காணப்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் 26% மாணவர்கள் ஒன்லைன் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button