உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) இன்று (15) காலை கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து கியேவில் இடம்பெற்றுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் செர்ஜி நைகிஃபோரோவ் (Sergey Nikiforov)தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி பயணித்த கார் மற்றும் கியேவில் எஸ்கார்ட் கார்கள் மீது கார் மோதியதாக நைகிஃபோரோவ் (Sergey Nikiforov) இன்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியுடன்(Volodymyr Zelensky) வந்த மருத்துவர்கள், லெகோவிகா (கார்) சாரதிக்கு அவசர உதவி அளித்து, வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், உக்ரைன் ஜனாதிபதிக்கு சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.