நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் தீர்க்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahinda Aluthgamge) தெரிவித்துள்ளார்.
எரிபொருளை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் செல்லவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 திகதிக்கும் பின்னர் தடையின்றி மின்சாரத்தை வழங்க அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.