இலங்கைசெய்திகள்

தமிழர்களை இனியும் மடையர்களாக்க முயலாதீர் – கூட்டமைப்பின் அரசு வலியுறுத்து!!

Prasanna Ranatunga

“இந்தியா இருக்கின்றது; எமக்குத் தீர்வைத் தரும் என்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் மீண்டும் புதுடில்லிக்குச் செல்ல கூட்டமைப்பின் தலைவர்கள் முயல்கின்றனர். தமிழ் மக்களை இனியும் மடையர்களாக்க முயல வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

  • இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியா செல்லவுள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியாஇ இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீண்டும் கொரோனாவின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இந்நிலையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொரோனாவுக்கு மத்தியிலும் தமது ஏமாற்று அரசியலை நடத்துகின்றனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசுதான் தீர்வை வழங்கும்.

எந்த நாட்டின் அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது” – என்றார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button