சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை (5) சனிக்கிழமை P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு, காலை 8.30 முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
அவ்வாறே நாளைய தினம் E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 4 மணித்தியாலங்களும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்று கிழமையன்று A,B,C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் சுழற்சி முறையில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவித்துள்ளது.