பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
யாழில் மீட்டர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய கும்பல் தொடர்பில் வெளியாகிய காணொளிகள் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டமையை சுட்டிக்காட்டிய அவர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முறைப்பாடு வழங்குவதில் சிக்கல் இருந்தால் நேரடியாக வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துக்கு தகவல்களை வழங்கினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நான் தயாராக உள்ளேன்” என அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.