கவிதைமுத்தமிழ் அரங்கம்.

சிலுவை. – கோபிகை!!

Poem

 இன்னும் கனத்துக் கொண்டிருக்கிறதுஇறக்கப்படாத
என் சிலுவை.


இறக்கை இழந்த ஈ
ஈரச்சாக்கினை சுமப்பதை போல
இந்தக்கனம் 
சற்றே கடினமானது தான்.

மரம் தன் இலைகளை உதிர்ப்பது போல
காலம் இந்தச் சுமைகளை
இறக்கிவிடலாம்….

பாறையின் உள்ளிருக்கும்
ஈரத்தைப் போல
சில நேரங்களில் கசிகிறது 
அன்பின் இழை.

உயர்ந்த வானத்தை
ஊசிமுனைகள் கிழிப்பதில்லை.

பாலுக்குள் எப்போதும்
நீர்மை
போவதில்லை.
பால் வேறு
நீர் வேறு தான்.

ஆர்ப்பரித்து
எழுந்த கனவுகள்
இதோ…
அவை ஏறப்போகின்றன.

ஆரணியங்களின்
திரட்சியைப்போல
அவள் எனும்
பெரும் சக்தி.

கப்பல்கள் கனதியானவைதான். – ஆனால்
ஓடங்களின் தனித்துவம்
இரசனையும் அழகுமானது…  

ஓடையின் சங்கீதத்தில்
அவள்
ஓய்யாரவாசம் செய்கிறாள்
உடைந்து விடாமல்….

கோபிகை.  

Related Articles

Leave a Reply

Back to top button