உலகம்செய்திகள்

YouTube பார்த்து விமானம் தயாரித்த குடும்பம்!!

Plane

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் ஒருவர் கொரோனா நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற எண்ணியிருக்கிறார். இதனால் பயிற்சிபெற்ற விமானியான அவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு குட்டி விமானத்தையே உருவாக்கிவிட்ட சம்பவம் பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பயிற்சிபெற்ற விமானியான அசோக் அலிசரில்(38) இங்கிலாந்தில் வசித்துவருகிறார். இவருடைய மனைவி அபிலாஷா துபே (35). இந்தத் தம்பதிகளுக்கு தாரா என்ற 6 வயது மகளும் தியா என்ற 3 வயது மகளும் இருக்கின்றனர். கொரோனா நேரத்தில் வீட்டிலேயே இவர்கள் முடங்க வேண்டியிருந்தது. இதனால் தங்களது நேரத்தை டிவி பார்த்தும், யூடியூப் பார்த்தும் கழிக்க விரும்பாத அசோக் ஒரு குட்டி விமானத்தை உருவாக்கலாம் என முடிவுசெய்து உதிரிபாகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.

இதையடுத்து அறிவுரை கையேடு மற்றும் யூடியூப்பின் துணையைக் கொண்டு அசோக்கின் குடும்பம் சிவப்பு வண்ணம் கொண்ட 4 பேர் பயணிக்கும் சொகுசுரக சிறிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளனர். இதற்கு ஒட்டுமொத்தக் குடும்பமும் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ததாகவும் அசோக் கூறியுள்ளார். எசெக்ஸ் பகுதியில் வசித்துவரும் இந்தக் குடும்பம் தாங்கள் தயாரித்த விமானத்தை தென்ஆப்பிரிக்கா வரை ஓட்டிச் சென்று டிரையல் பார்த்த நிகழ்வும் அரங்கேறியிருக்கிறது.

கொரோனா நேரத்தில் பலரும் செல்போன் மற்றம் டிவியிலேயே தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு கொரோனா நேரத்தில் சிறியரக விமானத்தையே தயாரித்துவிட்ட அசோக் பலரது மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி விட்டார். மேலும் இந்த விமானத்திற்கு டாலர் மதிப்பில் 1,55,000 செலவாகியது என்றும் இந்திய மதிப்பில் 1.5 கோடி எனவும் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button