இன்றைய பொருளாதார நெருக்கடியில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் இது, இன மத, மொழி கடந்த மக்களின் தேவை என்பதும் ஒன்றுபட்ட ஒரு தேசக்குடிகளின் குரல் என்பதும் அன்றாடம் ஏதோ ஒரு செயல் மூலமாக நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டக்களத்தில் தேரர் ஒருவரை மழையில் நனைய விடாமல் முஸ்லிம் மாணவி ஒருவர் புத்தகத்தினால் மறைத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் பலரும் அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இன மத பேதமின்றி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதனை இந்தப் புகைப்படம் உணர்த்துவதாகவும்
இந்த புகைப்படத்தால் குறித்த முஸ்லிம் மாணவி மீது மரியாதை ஏற்பட்டுள்ளதாக பலரும் இணையத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
“நீங்கள் உங்கள் மதம் அல்லது இனத்தை முன்வைக்கவில்லை. இந்த நாட்டின் கௌரவமான குடிமகன் என்ற உங்கள் மதிப்பை இது காட்டுகிறது.
இதுதான் நம் நாட்டுக்கு தேவை. உங்களுக்கு வாழ்த்துக்கள்” என இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.