கல்வி

ஓசோவின் தத்துவங்கள் சில….!!

Philosophy of Oso

“நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும்.” என்று சொன்னவர் தத்துவஞானி ஓஷோ.

  • ‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது
  • இதுவரை கேட்டது அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலியாக வைத்திரு!
  • இருள் என்ற ஒன்று இல்லை. வெளிச்சத்தை எடுத்துச் செல், இருள் மறைந்துவிடும். இருள் இருக்கிறதா?
  • மரத்துக்கு அருகில் செல்லுங்கள். யாரும் பார்க்காதபோது அதனுடன் பேசுங்கள்.மரத்தை தழுவிக் கொள்ளுங்கள். உங்களை நல்லவர் என்று அந்த மரம் உணரட்டும்!
  • சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!
  • ஒருவரது கண்ணைப் பார்க்கும்போது உங்கள் இதயத்தை உங்கள் கண்ணுக்குக் கொண்டு வாருங்கள்!
  • அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது!
  • வாழ்க்கை தருவது யாவும் சரியானதே! வாழ்க்கை பறித்துக் கொள்வது யாவும் சரியானதே!
  • அன்பு வெறுப்பு இல்லாமல் அமைந்திராது! நீ விரும்புகிற நபரையே தான் வெறுக்கவும் செய்வாய்.
  • செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்!
  • என்ன செய்வது என்பது கேள்வி அல்ல! எதையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான் கேள்வி!
  • எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கியது தான் ஆணும் பெண்ணும்! இதில் ஆண் யார்? பெண் யார்?
  • நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.
  • பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்!
  • எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும் போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்?
  • ரசித்ததைப் பாராட்டாதவன் கலைக் கொலைகாரன்!
  • உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.
  • நேராக வளரும் மரம் தான் முதலில் வெட்டப்படும்.
  • உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.
  • புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.
  • தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத்தலத்திற்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.
  • பக்குவம் என்பது யாரையும் சாராதிருப்பது.
  • குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே.
  • சமூகம், வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.
  • பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.
  • குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.
  • நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவையாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கிவைக்கிறது.
  • உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான்.
  • நீங்கள் விழித்திருக்கிறீர்களா? வெற்றி உங்களுடையதே!
  • கடவுளுக்குப் பிடித்தமானது சிரிப்பு! கடவுள் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நேசிக்கிறார்!
  • நீங்கள் உறங்கி எழுந்த பின்னால் தான் தூங்கியதையே உணர்வீர்கள்
  • நாக்கில் சொற்களின் சுவையை உணருங்கள்
  • நீந்தப் பழகாதீர்கள்! மிதக்கப் பழகுங்கள்!
  • துளி கடலில் இருக்கிறது! கடல் துளியில் இருக்கிறது!
  • இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாது!
  • கொந்தளிப்பு இல்லாத கடல் திறமையான மாலுமியை உருவாக்குவது இல்லை!
  • எப்போதும் வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் தலையைப் பட்டினி போடுகிறார்கள்!
  • திறமையான தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது குறைந்த வெட்டுகளையே வெட்டுவான்
  • இருவருக்கும் விருப்பம் இல்லாமல் சண்டை நடக்காது!
  • சொல்லாதவற்றின் பாடலே கண்ணீர்!
  • கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!
  • சிரித்த முகம் இல்லாதவன் சொந்தமாகக் கடை வைக்கக்கூடாது
  • ஒரு மலை உச்சியில் ஏறி நின்றால்தான் இன்னொரு மலை உச்சியைப் பார்க்க முடியும்
  • வாள் உறையை வெட்டாது
  • நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு; ஆனால் பூக்க மறக்காதே!
    கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.
  • ஆசைப்பட்டால் இழப்பீர்கள்; ஆசைப்படாவிட்டால், அது உங்களுடையதே!
  • எல்லாவற்றையும் ஓய்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • எல்லா நம்பிக்கைகளும் விஷம்போன்றது.
  • உங்கள் சக்தி அனைத்துமே பாலுணர்வு சக்தியே. வெளிப்பாடுதான் வெவ்வேறு விதமாக இருக்கிறது.
  • என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.

Related Articles

Leave a Reply

Back to top button