செய்திகள்பொருளாதார செய்திகள்

Perpetual Treasuries நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் முடக்கம்!!

Perpetual Treasuries

பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு இடைநிறுத்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் அந்த தடை நீடிக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டங்களின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதற்கும் முதனிலை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button