வவுனியா ஓமந்தை , பொற்கோவிலுக்குச் செல்லும் பிரதான வீதியைச் சீரமைத்துத்தருமாறு கோரிக்கையை முன்வைத்து அங்குள்ள மக்கள் வாகனங்களை வழிமறித்து போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டு வருகின்றனர் .
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா ஓமந்தை பொற்கோவில் செல்லும் வீதி அங்குள்ள கிரேசர் ஒன்றின் பயன்பாட்டினால் மிகவும் பாதிப்படைந்து மக்கள் பயன்பாட்டிற்குதவாக வகையில் காணப்படுகின்றனது . இவ்வீதியைச் சீரமைத்துத்தருமாறு பல தடவைகள் கோரியும் அது சீரமைக்கப்படவில்லை . எனவே எமது பாவனையிலுள்ள வீதி அங்குள்ள கிரேசர் ஒன்றிலிருந்து அகழப்பட்டு வரும் கற்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்களினால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளது இதனால் ஆலயத்திற்குச் செல்லவும் பாடசாலைகளுக்குச் செல்லவும் நோயாளர்களை அழைத்துச் செல்லவும் பல்வேறு அசௌகரியங்களை மேற்கொண்டு வருகின்றோம் .
எமது வீதி சீரமைப்பதற்குரிய உத்தரவாதம் அளிக்கப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று தெரிவித்து அங்கிருந்து கற்கள் அகழ்வு மேற்கொண்டு வரும் வாகனங்களை வழிமற்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் . சம்பவ இடத்திற்குச் சென்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி கோகிலகுமார் அஞ்சலி பிரதேச சபை தலைவருடன் கலந்துரையாடி அமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் அம் மக்களின் கோர்க்கை மகஜரை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . |
செய்தியாளர் கிஷோரன்.