கட்டுரைசெய்திகள்

மக்கள் மயப்படுத்தல் – சிறுபார்வை!! கரவையூர் தயா.

People seduction

இந்தப் படம் Kevin Carter என்பவரால் 1993 இல் சூடானில் எடுக்கப்பட்டது.
அந்த மக்கள் வறுமையின் உச்சத்தில் இருந்த காலம் அது.
அந்த ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற படமாக இந்த உலகமே ஏற்றுக்கொண்ட Kevin Carter எடுத்த இந்தப் படத்தைப் பற்றி சிலர் விமர்சித்தார்கள்:
“அவர் அந்தப் பிள்ளையைக் காப்பாற்றாமல் மனித நேயமே இல்லாமல் படப்பிடிப்பு செய்துள்ளார்.” என்றார்கள்.
இந்தப் படம் மக்களிடம் சென்று சேர்ந்து உலக மனிதத்தை தட்டியெழுப்பி உலகத்தின் மனக் கதவுகளை திறந்ததெப்படி?
அதே ஆண்டு அமெரிக்காவில் கோதுமை வழமைக்கு மாறாக பன்மடங்காக விளைந்துள்ளது. அமெரிக்காவின் பல புத்திஜீவிகள் ஒன்றுகூடி முடிவெடுத்து எண்பது விகிதத்திற்கு மேற்பட்ட கோதுமையைக் கடலிலே கொட்டினார்கள். இச் செயல் கோதுமையின் சந்தை விலையை குறையவிடாமல் வைத்திருப்பதற்கு மட்டுமே!
மேற்குறிப்பிட்ட இந்த இரண்டு செய்திகளும் 1993 ஆம் ஆண்டின் பங்குனி மாதத்தில் உலகின் முதன்மையான பத்திரிகைச் செய்திகளாயின. செய்திகள் மக்கள் மயமாகி மக்கள் மனதில் மாற்றத்தை விதைத்தது.
நம் நோக்கங்கள் சரியாக இருந்தால் மட்டுமே நம் பார்வைகள் சரியாக இருக்கும்!. நம் பார்வை சரியாக இருந்திருந்தால் இப் படம் விளம்பரமாக இருக்காது!
இதை விட இந்தச் செய்தியை வேறு எவரும் மக்கள் மயப்படுத்த முடியுமா?!
“ மக்கள் மயப்படுத்தல் “
உலகத்தின் பொருளாதார நலனில் சிக்குண்டு சிதைந்து போன இனங்களின் பட்டியல் நீண்டே கிடக்கிறது. வரிசைப்படுத்தலில் எம்மினம் எத்தனையாவது இடத்தில் என்பதே எம் விவாதமாக அமையாலாமா?
எம்மினத்தின் அடிப்படை உரிமை முதல் அடிப்படைத் தேவை வரை திட்டமிட்டு மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் இக் காலகட்டத்தில் மக்கள் விழிப்புணர்வின் கருவிகளே இவ்வகையான செயல்கள்.
எம்மினத்திற்கான தேவையையும் அது அடைந்த வளர்ச்சியையும் மக்கள் மயப்படுத்தல் இன்றைய காலத்தின் தேவை!
இன்று தாயகத்தோடும் எம்மினத்தின் தேவைகளோடும் தொடர்பற்ற நிலையில் இருக்கும் தலைமுறைகளுக்கான தொடர்புப் பாலமே இவ்வகை செயற்பாடுகள்.
“வரலாறே எங்கள் வழிகாட்டி”
“மனிதர்களில் பலர் இருபது இருபத்தைந்து வயதினிலே
இறந்து விடுகிறார்கள் அடக்கம் செய்யத்தான் எழுபது எண்பது ஆண்டுகள் ஆகின்றது” -பெர்நாட்ஷா-

Related Articles

Leave a Reply

Back to top button