இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 400,000 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வெளிநாடு செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்பது விசேட அம்சமாகும்.