2022ஆம் ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஜனவரி 08, 10 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனுமொரு தினத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
முக்கியமான சில அமைச்சு பதவிகள் கைமாறப்படவுள்ளதுடன், ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கையளிக்கப்படவுள்ளதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் – சுடர்